மின் சட்டத்துறை சீர்த்திருத்ததிற்கு அமைச்சரவை அனுமதி!

முன்மொழியப்பட்ட மின்சாரத் துறை சீர்திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பான சட்டமூலத்திற்கு நேற்று பிற்பகல் கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதன்படி, புதிய சட்டமூலம் வர்த்தமானியாக வெளியிடப்பட்டு, பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும்.

பாராளுமன்ற அனுமதியைப் பெற்ற பின்னர், இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு, செயல்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேம்படுத்த புதிய மின்சாரச் சட்டத்தின் ஊடாக திட்டமிட்டுள்ளது.

புதிய சட்டம் ஊடாக மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகம் ஆகியவற்றில் தனியார் துறை பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள அனுமதிக்கிறது.