யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்

யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிறிய ரக வான் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தீயினை அணைக்க முயன்ற வானின் உரிமையாளரும் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை சேவையில் ஈடுபட்டு வந்த வானே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.