கனேடிய தம்பதியினருக்கு லொட்டரியில் அடித்த அதிஷ்டம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர், தற்செயலாக இரண்டு லொட்டரிச்சீட்டுகளை வாங்கியுள்ளார்கள். அதிர்ஷ்டவசமாக, இரண்டு லொட்டரிச்சீட்டுகளுக்கும் பரிசு கிடைக்க, ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள் அவர்கள்.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Port Moody என்னுமிடத்தில் வாழும் Shannon Von Richter, Karsten தம்பதியருக்கு, தங்கள் நகரத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு லொட்டரியில் பரிசு விழுந்துள்ளதாக தகவல் கிடைக்க, ஆச்சரியமடைந்துள்ளார்கள்.

ஆனால், அந்த இரண்டு பரிசுமே அவர்களுக்குத்தான் என்பதை முதலில் அவர்கள் அறியவில்லை. தம்பதியர் தற்செயலாக இரண்டு லொட்டரிச்சீட்டுகள் வாங்க, இரண்டு சீட்டுகளுக்குமே பரிசு விழுந்துள்ளதை பின்புதான் அவர்கள் அறிந்துகொண்டுள்ளார்கள்.

ஒரு லொட்டரிச்சீட்டுக்கு 1,666,666 டொலர்கள் வீதம் மொத்தம் 3,333,333.40 டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது தம்பதியருக்கு.

இவ்வளவு பெரிய தொகை பரிசாக கிடைக்கும் என எதிர்பார்க்காததால், அதை என்ன செய்வது என்று திட்டமிடக்கூட இல்லையாம் அவர்கள்.