தற்கொலை செய்ய கடலில் குதித்த சிறுமி மீட்பு

பாணந்துறை கடற்கரைக்கு வந்த சிறுமி ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்ட போது பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் பிரிவு அதிகாரிகளான சப்-இன்ஸ்பெக்டர் நிமல்சிறி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் தசுன் ஆகியோர் உடனடியாக செயற்பட்டு சிறுமியின் உயிரைக் காப்பாற்றியதாக பொலிஸ் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொஸ்பலான, பொல்பிதிமுகலான பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது சிறுமியே இவ்வாறு கடலில் அடித்து செல்லப்பட்டார்.

உயிரைக் காப்பாற்றிய சிறுமியை தாயிடம் ஒப்படைத்ததில், சிறுமி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் கடலில் குதித்திருப்பது தெரியவந்துள்ளது.