யாழில் விபரீத முடிவால் உயிரிழந்த இளைஞர்

  யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இளைஞர் ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

உடல் கூற்று சோதனை

சம்பவத்தில் பருத்தித்துறை 4 ஆம் குறுக்குத்தெரு வீதியைச் சேர்ந்த சாருஜன் வயது 22 என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறு வயதில் தந்தை பிரிந்த சென்ற நிலையில் தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த நிலையில் இவ் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்த்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இளைஞர்  உயிரழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில்  மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்