இலங்கைக்கு வந்துள்ள பிரபல பிரபஞ்ச  அழகி

  பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்ட வியட்நாமை சேர்ந்த எலிசபெத் சுஜாதா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

துறவு வாழ்க்கையில் நுழைந்து 15வது வருட பூர்தியை முன்னிட்டு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். துறவியாவதற்கு முன்பு, எலிசபெத் நான்கு முறை வியட்நாம் அழகியாக முடிசூட்டப்பட்டுள்ளது.

அத்துடன் எலிசபெத் சுஜாதா மிஸ் யுனிவர்ஸாகவும் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்னர் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்து துறவு வாழ்க்கையில் நுழைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சுஜாதா பிக்குனி இலங்கைக்கு விஜயம் செய்து வரலாற்று வழிபாட்டுத் தலங்களைப் பார்வையிட்டுள்ளதுடன் மிஹிந்தலா ரஜமஹா விகாரைக்கு திங்கட்கிழமை (27) விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.