கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் யாழ் மாணவி சாதனை!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை 2022(2023) ஆம் ஆண்டிற்கான பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ளது.

இந் நிலையில் யாழ் மாவட்ட மாணவி அனைத்துப் பாடங்களிலும் அதிவிஷேட சித்திகளைப் பெற்றுள்ளார்.

அதிவிஷேட சித்திகளைப் (9A) பெற்ற மாணவியான அபிவர்ஷினி ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியுள்ளமைக் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மாணவியின் பெற்றோர் அகம் நெகிழ்ந்து வாழ்த்துக்களையும் வெற்றிக்குத் துணை புரிந்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.