இலங்கையில் உச்சம் தொட்ட போஞ்சி விலை

சந்தையில் போஞ்சி விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, சந்தையில் போஞ்சி கிலோ ஒன்றின் விலை 950 முதல் 1000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்முதல் விலை

இவ்வாறு போஞ்சியின் விலை உயர்வுக்கு இடைத்தரகர்களே காரணம் என விவசாயிகள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

எனினும், இடைத்தரகர்களிடம் இருந்து ஒரு கிலோ போஞ்சி 550 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

இடைத்தரகர்களின் இந்த செயற்பாடு குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.