பால்மா விலை தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அடுத்த வாரம் முதல் 400 கிராம் பால் மா பாக்கெட் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், 1 கிலோகிராம் பால் மாவின் விலை 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும்.

வற் வரி அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, மன்றத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்திருந்தார்.

இந்த புதிய விலை இந்த வார நடுவிலிருந்து அமுலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.