சுவிசர்லாந்தில் கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள்

சுவிசர்லாந்து நாட்டில் நொசத்தல் இளையோர் , தமிழ் பெண்களுடன் கரம் கொடுத்தல் எனும் இரு அமைப்புகளும் ஒன்றிணைந்து நடாத்திய மூன்றாவது தைப்பொங்கல்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இத் தைப்பொங்கல் விழாவானது, லசத்போம் நகரில் கடந்த (27.01.2024) ஆம் திகதி கொண்டாடப்பட்டது அதன்போது, நொசத்தல்வாழ் பல்லின மக்களின் இன,மத, மொழி கடந்த ஒற்றுமை உணர்வின் ஒன்றிணைவாக்கம் மேலோங்கியிருந்தது.

மேலும், தமிழர் வாழ்வியல் உண்மைகளை வெளிநாட்டவர்களுக்கு கொண்டுசேர்த்த பெருமையை இப்பொங்கல்விழா வெளிப்படுத்தியிருந்தது.

இவ்விழா தமிழரின் சமய விஞ்ஞான அழகியல் தன்மைகளையும் உள்ளடக்கி எமது கலைநிகழ்வுகளையும் தேச எழுச்சியையும் நினைவு கூர்ந்த நாளாகவும் அமைந்திருந்தது.

பன்னாட்டவருக்கான திறமை பரிசு
அத்தோடு, விழாவில், சுவிஸ் நாட்டின் முக்கிய அரசியல் கலாச்சார சமூக பிரமுகர்களும் கத்தோலிக்க மதகுருவும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தனர்.

அந்த உரையின் போது, இருஅமைப்புக்களும் தொடர்ச்சியாக தனிநபராகவும் அமைப்பு ரீதியாகவும் செயற்திட்டங்களிற்கான துறைகளில் பங்குகொண்டு நான்கு தடவைகள் நாம் “பன்னாட்டவருக்கான திறமை பரிசு “ பெற்ற வெற்றியாளர்களாக மாநில ரீதியாக தெரிவுசெய்யப்பட்டிருக்கிறோம் என்று பெருமையுடன் தெரிவித்திருந்தனர்.