இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் புதிய நிபந்தனைகள்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய பிணையெடுப்பு பொதியின் இரண்டாவது மதிப்பாய்வுக்கு முன்னதாக நிறைவேற்ற வேண்டிய 75 புதிய நிபந்தனைகளை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டியிருந்த 27 நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கான திகதிகளை மாற்றம் செய்வதற்கு அல்லது நீடிப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவேற்றப்படவேண்டிய 73 நிபந்தனைகளில் 60 நிபந்தனைகளை இலங்கை நிறைவேற்றியுள்ளதாகவும் நிறைவேற்றப்படாத 13 நிபந்தனைகளில் 08 நிபந்தனைகள் முன்கோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 05 வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாத பொறுப்புகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி 75 புதிய நிபந்தனைகளுடன் கடந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய 27 நிபந்தனைகளும் நவம்பர் இறுதிக்குள் நிறைவேற்றப்படவேண்டிய 08 நிபந்தனைகளுமாக தற்போது 110 நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியத்தின்இரண்டாவது மதிப்பாய்வு தொடங்குவதற்கு முன்னதாக இலங்கை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக வெரிட்டே ரிசர்ச் ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.