டயட் இருக்காமல் உடல் எடையை குறைக்கணுமா?

கடினமாக கஷ்டபட்டு உடல் எடை குறைப்பதற்காக பாடுபடுபவர்களுக்கு உடல் எடை குறையவே குறையாது.

அவர்கள் உடற்பயிற்சி செய்வார்கள், டயட்டில் இருப்பார்கள், ஆனால் எடையை குறைப்பது அவ்வளவு சுலபம் இல்லை.

ஆனால் சிலருக்கு காரணம் எதுவும் இல்லாமல் உடல் எடை தானாக குறைவடையும், ஆனால் இதற்கான காரணம் யாருக்கும் தெரிவதில்லை. 

ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைப்பது நல்லது, ஆனால் எந்த காரணமும் இல்லாமல் ஆரோக்கியமற்ற எடை இழப்பு ஏன் ஏற்படுகிறது. இது நோய்களின் அறிகுறியா இல்லையா என்பது பலருக்கு தெரியாது.

இவ்வாறான நிலைமையின் போது இதற்கான காரணத்தை கண்டுபிடித்தால் அதற்கான பதில் எளிதில் கிடைக்கும். வேகமாக உடல் எடை குறைவதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

மனஅழுத்தம்

மன அழுத்தம் என்பது நமது உடலின் ஆரோக்கியத்திலும் பங்கு கொள்கின்றது. மன அழுத்தம் அதிகமாகும் போது நமது மூளை நம்முடைய உடலில் உள்ள கலோரிகளை எரிப்பதற்கான வாய்பை கொடுக்கும்.

இதனால் வேவையற்ற உடல் எடை குறையும்.

நீரிழிவு பிரச்சினை

நீரழிவு பிரச்சனை இருப்பவர்களுக்கு உடல் அதிரிக்கவும் செய்யும், எடை குறையவும் செய்யும். நீரிழிவு பிரச்சினை ஏற்படும்போது எடை இழப்பும் ஏற்படும்.

ஹைபர் தைராய்டிசம்

உடலில் தைராய்டு பிரச்சனை இருந்தால் உடல் எடை வேகமாக குறையும். தைராய்டு சுரப்பு அதிகமாகும் போது உடலில் உள்ள கொழுப்புச்சத்தின் அளவும் அடர்த்தியும் அதாவது உடலுக்கு தேவையான கொழுப்பு குறைய ஆரம்பிக்கும் போது இது எடை இழப்புக்கு வழிவகுக்கலாம். இது உடலுக்கு நல்லது அல்ல.

மன ஆரோக்கியம் பாதிப்படைதல்

நாம் மனதளவில் ஆரோக்கியமாக இல்லை என்றால் சரியாக சாப்பிட முடியாது சரியாக துங்க முடியாது.

இவ்வாறு இருக்கும் போது உடல் எடை குறையும், நம்முடைய உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கும் மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

இதனால் தான் நலம் பாதிக்கப்படும்போது மன ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது. அதேபோல தான் மன ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும்போது உடல் நலத்திலும் பாதிப்பு ஏற்படுகின்றன.

இதய பிரச்சினை

உடல் எடை குறைவாக இருப்பவர்கள் கட்டாயம் இதய பிரச்சனை உள்ளதா என பரிசோதித்து பாருங்கள். இது மிகவும் ஆபத்தானது.

சிலருக்கு இதயத்தின் செயற்பாடுகள் சரியாக இல்லாமல் இருக்கும். அதனால் ஏற்படும் இதயச் செயலிழப்பு போன்றவற்றின் அறிகுறியாக திடீர் எடை இழப்பு ஏற்படக்கூடும்.

உடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருந்தால் ஊட்டச்சத்து உறிஞ்சும் செயற்பாடு தடைபடும், அதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் உடல் எடை குறையும்.