விஸ்வ புத்தருக்கு விளக்கமறியல்!

‘விஸ்வ புத்தர்’ என்ற நபர் பெப்ரவரி 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ககொடவில நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

விஸ்வ புத்தர் என்ற பெயரில் சமூக ஊடகங்கள் ஊடாக பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவருக்கு பிணை வழங்குமாறு நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டிருந்த போதிலும், நீதிமன்றத்தின் எச்சரிக்கையையும் மீறி பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் காரணமாக விஸ்வ புத்த என்ற நபர் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.