மீண்டும் இலங்கைக்கு வரும் இசைஞானி

இலங்கையில் நடைபெறவிருந்த இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 20ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இசைஞானி இளையராஜாவின் “என்றும் ராஜா ராஜாதான்” என்ற இசை நிகழ்ச்சி கடந்த மாதம் 27 மற்றும் 28 திகதிகளில் கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவிருந்தது.

இசைநிகழ்ச்சிக்காக இளையராஜா வருகை தந்திருந்த நிலையில், இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக ஜனவரி 25ஆம் திகதி உயிரிழந்தார்.

இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சி
எனவே, குறித்த நிகழ்ச்சி இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 20ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இசை நிகழ்ச்சிக்காக ஏற்கனவே நுழைவு சீட்டுக்களை பெற்றுள்ள மற்றும் பதிவு செய்துள்ளவர்கள், அந்த நுழைவுசீட்டுக்களையே பயன்படுத்தி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிகழ்ச்சியினை பார்வையிட முடியும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரட்ணம் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.