கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியசாலையில்!

  குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (02.02.2024) கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (03.02.2024) மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், எதிர்வரும் (15.02.2024) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.