சுதந்திர நாளில் யாழ் பல்கலையில் பறந்த கறுப்புக் கொடி!

இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாளாகப் பிரகடனப்படுத்தி, கறுப்பு தினப் பேரணியை முன்னெடுக்க யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், சுதந்திர தினமான இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04.2.2024) நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்று வருகின்றன.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்

இந்நிலையில், யாழ். பல்கலைக்கழக ஊடக மற்றும் வெகுசன தொடர்புப் பிரிவு மாணவர் ஒன்றியம் கிளிநொச்சி – இரணைமடு சந்தியிலிருந்து டிப்போச் சந்தி வரை நடைபெறும் கரிநாள் பேரணியில் பங்குகொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் பகுதிகளில் சுதந்திரம் கரி நாளாக பிரகடனப்படுத்தி கறுப்புக்கொடி கொடிகள் பறக்கவிடப்பட்டு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.