அனுமதி மறுக்கப்பட்ட சீனக்கப்பல் இலங்கைக்குள்!

   இலங்கையினால் விசேட பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் தற்போது அந்த பகுதிக்குள் காணப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகின்றன.

சீனாவின் இயற்கை வள அமைச்சிற்கு சொந்தமான தேர்ட் இன்ஸ்டியுட் ஒவ் ஓசோனோலஜியின் ஜியாங் யாங் கொங் 3 என்ற ஆராய்ச்சி கப்பலே, இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்குள் காணப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்ததை தொடர்ந்து குறிப்பிட்ட கப்பல் மாலைதீவை நோக்கி சென்றது. இந்நிலையில் தற்போது அந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் – இலங்கையின் பொருளாதார வலயத்திற்குள் காணப்படுகின்றது என தகவல்கள் வெளியாகின்றன.