ஜனாதிபதி சரத் பொன்சேகா இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (07.02.2024) இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சுமார் இருபது நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி வெளிநடப்பு
இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் ஜனாதிபதி உரையாற்றிய போது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அவையை விட்டு வெளிநடப்பு செய்திருந்தனர்.

எனினும் சரத் பொன்சேகா, குமார வெல்கம, ராஜித சேனாரட்ன போன்ற கட்சியின் சில உறுப்பினர்கள் அவையில் அமர்ந்திருந்து ஜனாதிபதியின் உரையை செவிமடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.