இலங்கையின் அடுத்த தலைமை அனுரகுமார திசாநாயக்க

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க என்று இந்தியாவின் ரோ உளவுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் நேற்று( 08.02.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்திய ரோ உளவுப் பிரிவு அறிக்கை
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எங்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார இந்தியாவுக்கு வெறுமனே செல்லவில்லை.

இந்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்த காரணத்தினாலேயே அவர் அங்கு சென்றுள்ளார்.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார என்று இந்திய ரோ உளவுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளதன் காரணமாகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அடுத்த அரசாங்கம் எமது தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டி தலைமையிலான அரசாங்கமாகத் தான் இருக்கும்” என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.