நாடு திரும்பினார் அனுரகுமார!

இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (10) பிற்பகல் நாடு திரும்பினார்.

அவர் உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனுரகுமார திஸாநாயக்க,

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் திறன் ஜனாதிபதிக்கு இல்லை.எனவே இந்த ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். அதற்கான பெரும் உத்வேகமும் நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது. அதன் மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்களின் நம்பிக்கை. இதற்காக எமக்கு சர்வதேச ஆதரவும் தேவை. ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்திய விஜயம் குறித்து முழு விளக்கத்தை அளிப்போன்” என்றார்.