நாட்டின் பல பகுதிகளில் கடும் வெப்பநிலை!

  நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை 1 முதல் 4 செல்சியஸினால் அதிகரித்துள்ளது. புத்தளத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, புத்தளத்தில் 33.7 செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரத்தினபுரியில் 33.5 செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவாகியது.

கட்டுநாயக்கவில் வெப்பநிலை 33.4 செல்சியஸாக உயர்ந்துள்ளது. அதேவேளை அடுத்த மாதம் வெப்பமான காலநிலை மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.