யாழில் வாந்தி எடுப்பேன் என கூறிய நடிகை!

  யாழில் நடிகை மைனா நந்தினியின் பேசும்போது அவரின் வாய்க்கு அருகே நபர் ஒருவர் மைக்கை நீட்ட கடுப்பான மைனா நந்தினி, இப்படி செய்தால் வார்த்தைகள் வராது வாந்திதான் வரும் எனகூறிய காணொளி சமூக வலைத்தளன்களில் வைரலாகி வருகின்றது,

யாழில் இடம்பெற்ற பாடகர் ஹரிஹரன் இசை நிகழ்ச்சிக்காக தென்னிந்திய சினிமா பிரபலங்கள் நாட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

பெரும் களேபரம் 

இதன்போதே தன்னை சூழ்ந்தவர்கள் மைக்கை நீட்டியபோதே நடிகை மைனா நந்தினி வாந்தி வருமென கடுப்பாகி பதிலளித்துள்ளார்.

அந்தவகையில் பாடகர் ஹரிஹரன், நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா மாஸ்டர், நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா, நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் வந்திருந்தனர்.

இந்நிலையில் இசை நிகழ்ச்சி பெருமளவு மக்கள் அத்துமீறி மேடையருகே செல்ல முயன்றதால் பெரும் களேபரம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.