காலநிலையில் ஏற்ப்பட்டுள்ள திடீர் மாற்றம்!

தற்போது நிலவி  வரும் காலநிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழை மற்றும் பலத்த காற்று

இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தற்போது வறண்ட வானிலை நிலவும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நாளை மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.