ஜக்கிய மக்கள் சக்திக்குள் முரண்பாடு!

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை உடனடியாக நீக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி முறை
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில் இருவரும் தங்கள் மாற்றுக்கருத்துக்களை முன்வைத்துள்ளதோடு, ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டுமானால் எதற்காக ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும்? சேனாரத்ன இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும் தமது கருத்தை வெளியிட்ட ரஞ்சித் மத்தும பண்டார மக்களின் வாக்குரிமைக்கான உரிமையை நிலைநாட்ட வேண்டும். மக்களின் வாக்குரிமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.