பிரபல பாலிவூட் நடிகை மரணம்!

பிரபல பாலிவுட் பின்னணி பாடகி மல்லிகா ராஜ்புத் என்ற விஜயலட்சுமி அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் மல்லிகாவின் தாய் சுமித்ரா சிங் கருத்து தெரிவிக்கையில்,

இந்த சம்பவம் எப்போது நடந்தது என தெரியவில்லை எனவும் காலையில் அவரது அறைக்கு சென்ற போதுதான் குறித்த சம்பவத்தை அறிந்ததாகவும் இது தொடர்பில் பொலிஸார் விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் சுல்தான்பூர் மாவட்டம் சீதகுண்ட் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் பாலிவுட் சினிமாவின் பின்னணி பாடகியாகவும் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.