இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை!

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பணியாளர்களைத் திருப்பி அனுப்புவதில் ஏற்படும் தாமதத்தைத் தடுப்பதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கங்களும் செயற்பட்டுத்தப்பட்டு வருவதாகக் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.