ஒட்டுமொத்த வியாதியையும் குணமாக்கும் ஒட்டகப்பால்

ஒட்டகப் பாலில் இயற்கையிலேயே இன்சுலின் போன்ற புரதங்கள் இருக்கிறது மற்றும் இது உடலில் இருக்கக்கூடிய பல வியாதிகளுக்கு மருந்தாக செயற்படும்.

இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் உடலில் உள்ள பிரச்சனைகளை அடியோடு ஒளிக்க கூடிய அளவிற்கு சக்தி உள்ள பாலாகும்.

இந்த ஒட்டக பாலால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒட்டக பால்

ஒட்டகப்பாலில் இயற்கையாகவே இன்சுலின் மற்றும் புரதங்கள் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதை அருந்தலாம்.

இது தவிர இந்த பால் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மையின்மையை போக்குகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் ஒட்டகப்பால் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும்.

மாலைக்கண் நோய் இருப்பவர்கள் இந்த பாலை அருந்தலாம், இதில் அதிக வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, கண் ஆரோக்கியம் மேம்படும்.

ஒட்டகப்பால் அருந்துவதால் நிறைவான ஊட்டச்சத்து கிடைப்பதுடன் உடலையும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.