இலங்கையில் காணி வாங்குவோருக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் காணி விலைகள் வரும் காலத்தில் வேகமாக வீழ்ச்சியடையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இலங்கையில் காணி சந்தையை திறக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாட்டில் ஒரு அங்குல நிலம் கூட சொந்தமில்லாத 20 லட்சம் குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கியதன் மூலமும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத காணிகளையும் விவசாயம் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்ததன் மூலமும் இந்த நிலைமை ஏற்படுமெனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

காணி விலைகள் குறையும்

அதேவேளை இதுவரை திறந்த சந்தையாக இருந்த காணி வர்த்தகம் மூடப்படுவதன் மூலம் இந்நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

20 லட்சம் மக்களுக்கு விற்று அடமானம் வைக்கக்கூடிய காணி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளமையினால் நாட்டின் சந்தையில் காணி வழங்கல் அதிகரித்துள்ளதன் காரணமாகவும் காணி விலையில் வீழ்ச்சி ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதோடு அரசாங்கத்திற்கு சொந்தமான காணியை விவசாயம் மற்றும் தொழில்துறைக்கு தனியாரிடம் கொடுப்பதன் மூலம் மக்கள் தனியாரிடம் காணி வாங்கும் தேவை குறையும் என எதிர்பார்கக்ப்படுகின்றது.

அதுமட்டுமின்றி, கடந்த வரவு செலவுத் திட்டத்தில், ரயில்வே சிறிய நகரங்கள், வீட்டுத் திட்டங்கள், சுற்றுலா விடுதிகள், Station Plaza, மற்றும் வணிக வளாகங்களுக்கு, அதிகளவான காணிகளை வைத்திருக்கும் ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான காணியை குத்தகை அடிப்படையில் வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகள் காரணமாக , காணி விலை குறைவை நேரடியாக பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.