ஐந்து நாட்கள் ஆடை அணியாத பெண்கள்

 என்னதான் இது டிஜிடல் காலமாக இருந்தாலும் பாரம்பரிய வாழ்க்கை முறையை இன்னும் சில கிராமங்களில் வழக்கப்டுத்தி கொண்டுதான் வருகிறார்கள்.

இந்தியாவில் சில கிராமப்பகுதிகளில் பழங்கால மரபுகளை மனிதர்கள் இன்னும் கடைபிடித்து வருகின்றனர்.அந்த வகையில் இது மிகவும் வித்தியாசமாகவும் வினோதமாகவும் இருக்கும்.

இவ்வாறு தான் இந்தியாவில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் ஆடை அணியாத சடங்கை பின்பற்றி வருகின்றனர்.

அந்த சடங்கைத்தான் தான் இந்த பதிவில் தொடர்ந்து நாம் பார்க்க போகிறோம்.

ஹிமாச்சல பிரதேசம்

ஒரு காலத்தில் ஹிமாச்சல பிரதேசத்தில் மணிகர்ணா பள்ளதாக்கில் உள்ள பினி என்னும் கிராமத்தில் பேய்கள் மற்றும் அசுராகள் இருப்பதாக நம்பப்பட்டு இருக்கிறது.

இந்த பேய்கள் அந்த கிராமத்தில் இருக்கும்  திருமணமாகி அழகாக உடத்திய பெண்களை கூட்டிற்று போய் விடுமாம். அந்த நேரத்தில் இந்த பெண்களை லாஹு கோண்ட் என்ற தெய்வம் காப்பாற்றியுள்ளது.

இதன் காரணமாகத்தான் பேய்களை தெய்வம் அழித்ததை நினைவாக வைத்து சாவான் மாதத்தில் ஐந்து நாட்கள் பெண்கள் யாருமே ஆடைகள் அணிவதில்லை.

அனைத்து பெண்களும் நிர்வானமாகவே இருக்க வேண்டும்.இதை மீறி அவர்கள் ஆடையுடன் இருந்தால் அவர்களை பேய்வந்து மறுபடியும் அழைத்து சென்று விடும் என்பது அந்த கிராம மக்களின் நம்பிக்கையாகும்.

மேலும் இதன்பொது பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் சில கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.மற்றும் இந்த நிகழ்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரையும் கிராமத்திற்குள் நுழைய மக்கள் அனுமதிப்பதில்லை.

இவர்களின் இந்த சிறப்பு விழாவில் வெளியூர் மக்கள் யாராலும் பங்கேற்க முடியாது.