யாழில் மக்களின் உயிருக்கு ஆபத்தாகும் புகையிரத கடவைகள்!

   யாழில் 33 பாதுகாப்பு அற்ற கடவைகளையும் பாதுகாப்பான கடவைகளாக மாற்றம் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு கடந்த மாதம் ஜனாதிபதி ரனில் விக்கிரம சிங்க விஜயம் மேற்கொண்டு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது புகையிரத கடவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

அதிகாரிகள் அசமந்தம்

இந்த வருடத்திற்குள் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் , புகையிரத திணைக்களத்திடம் மதிப்பீட்டு அறிக்கைகளும் ஜனாதிபதியால் கோரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

எனினும் ஒரு மாத காலம் கடந்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அதேவேளை கடந்த வாரம் இணுவில் பகுதியில் வான் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் வானில் பயணித்த மூன்று மாத குழந்தையும் , தந்தையும் பரிதாபமாக உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

சம்பவத்தில் தாய் படுகாயமடைந்து யாழ், போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , ஊர் மக்கள் புகையிரத்தை தடுத்து நிறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.