யாழ் மக்களிடம் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டிகளை திருடும் வயோதிபர் தொடர்பில் பொது மக்களிடம் பொலிஸார் உதவிகோரியுள்ளனர்.

யாழ்ப்பாணம் – நெல்லியடி, தெல்லிப்பழை என பல இடங்களில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டி திருட்டில் அண்மை காலமாக ஈடுபட்டு வருகின்றார்.

தொடர் திருட்டு

அந்தவகையில் நேற்றையதினம் தெல்லிப்பழை பகுதியிலும் ஒரு துவிச்சக்கர வண்டியை அந்த முதியவர் திருடிச் செல்வது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் முதியவரை தெரிந்தவர்கள் 0723475566 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு தகவல் வழங்க முடியும் என பொலிசார் தெரிவித்தனர்.