விஜயை கடுமையாக திட்டிய மனைவி!

ஏற்கனவே விஜய் குறித்து பல விஷயம் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், விஜய்யை அவரது மனைவி திட்டிய சம்பவம் ஒன்று திடீரென வைரலாகி வருகிறது.

பிரபல நடிகர் சாந்தனு பாக்யராஜ் தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்து கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 

இந்த திருமணத்தில் நடிகர் விஜய்யும் கலந்துகொண்டார். அதுமட்டுமின்றி மணமகள் கழுத்தில் மணமகன் கட்டவேண்டிய தாலியை நடிகர் விஜய் தான், சாந்தனுவிற்கு எடுத்துக்கொண்டுள்ளார்.

சாந்தனுவின் திருமணத்தில் இருந்த அந்த புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது. 

இதனை அறிந்த விஜய்யின் மனைவி சங்கீதா, ‘நீங்கள் எப்படி தாலி எடுத்துக்கொடுக்கலாம். அது பெரியவர்கள் செய்யவேண்டிய விஷயம்’ என்று விஜய்யை திட்டி தீர்த்துவிட்டாராம். 

இந்த சம்பவத்தை நடிகர் சாந்தனு பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது