சுவிசில் மரணமடைந்தோரின் உடல்களை புதைப்பதில் பிரச்சினை!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில், மரணமடைந்தவர்களின் உடல்களை புதைப்பது தொடர்பில் ஒரு பிரச்சினை இருப்பதாக நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிபுணர் தெரிவித்துள்ள தகவல்

சுவிஸ் மாகாணங்களில், மரணமடைந்தவர்களின் உடல்களை புதைப்பது தொடர்பில் வெவ்வேறு மாகாணங்களில், வெவ்வேறு விதமான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

Vaud மாகாணத்தில், மரணமடைந்தவர்களின் உடல்களை சுமார் 4 அடி பள்ளம் தோண்டிப் புதைக்கவேண்டும். Jura மாகாணத்திலோ, சுமார் ஆறு அடி ஆழத்தில் புதைக்கவேண்டும். ஜெனீவாவிலோ மேலும் அதிக ஆழத்தில் உடல்களை புதைக்கிறார்களாம்.

ஆனால், உயிரற்ற உடல்கள் மண்ணில் மட்குவது தொடர்பான துறை நிபுணரான Vincent Varlet என்பவர், அதிக ஆழத்தில் உடல்களைப் புதைப்பது சரியல்ல என்கிறார்.

அதாவது, ஆழம் அதிகமாக, அதிகமாக, மண்ணில் போதுமான அளவில் பாக்டீரியாக்கள் இருக்காது என்பதால், புதைக்கப்பட்ட உடல் மண்ணில் மட்காது என்றும், ஆகவே, அவ்வளவு ஆழத்தில் உடல்களைப் புதைப்பது சரியல்ல என்றும் கூறுகிறார் Vincent Varlet. உடல்களைப் புதைப்பதில் இப்படி ஒரு பிரச்சினை உள்ளதா என வியக்கிறார்கள் இந்த விடயத்தை முதன்முறையாக கேள்விப்படுபவர்கள்.