உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா?

உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்தில் உள்ளதுடன் அங்கு 59.96% படித்தவர்கள் காணப்படுகின்றனர்.

இரண்டாம் இடம் 

அதேவேளை, 56.7% கல்வி அறிவு கொண்டவர்களுடன் ரஷ்யா இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது.

மேலும், முன்றாவது இடத்தினை ஜப்பான் பிடித்துள்ளதுடன் அங்கு 52.7% மான கல்வி கற்றவர்கள் காணப்படுகின்றனர்.

அமெரிக்கா

அதனை பின் தொடர்ந்து நான்காவது இடத்தினை லக்சம்பர்க் பிடித்துள்ளதுடன் அந்நாட்டில் 51.3% படித்தவர்கள் இருப்பதாக பதிவாகியுள்ளது.

அத்துடன், கல்வி தகுதி மிகுந்த நாடுகளின் பட்டியலில் தென்கொரியா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ள நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் 50.1% என்ற வீதத்தில் ஆறாவது இடத்தில் சமநிலையில் உள்ளன.

பத்தாவது இடம்

மேலும், கல்வி கற்றவர்கள் நிறைந்த நாடுகளில் அயர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் 8, 9 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.

இந்நிலையில், அவுஸ்திரேலியா 49.3% என்ற வீதத்தில் பத்தாவது இடத்தினை பெற்றுள்ளது.   

Canada – 60.0%

Russia – 56.7%

Japan – 52.7%

Luxembourg – 51.3%

South Korea – 50.7%

United States – 50.1%

Israel – 50.1%

Ireland – 49.9%

United Kingdom – 49.4%

Australia – 49.3%