கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொல்லப்பட்டமைக்கான கராணம் வெளியானது!

கனடா தலைநகர் ஒட்டாவில் அண்மையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நாட்டையை உலுக்கியுள்ளது.

இச்சம்பவத்தின் உண்மையான காரணத்தை நபரொருவர் முகநூலில் வெளியிட்டுள்ளார்.

குறித்த இலங்கையர்களை படுகொலை செய்த 19 வயதான மாணவர் பெப்ரியோ டி சொய்சா இளைஞன் படிப்பதற்காக இவர்கள் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.

மேலும் குறித்த சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட தர்ஷனியின் கணவரான தனுஷ்க விக்ரமசிங்கவின் நண்பருடைய மகன் தான் இந்த பெப்ரியோ டி சொய்சா என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேறுவொரு வீட்டில் தங்கியிருந்து படித்து வந்ததாகவும், அங்கு அவர் வீடியோ கேம்களுக்கு அதிக அடிமையாக இருந்ததாகவும், மேலும் வன்முறையாக நடந்து கொண்ட காரணத்தினால், குடியிருப்பாளர்களின் வேண்டுகோளின்படி அவர் வேறு இடத்திற்கு செல்ல வேண்டியிருந்த நிலையில், தனுஷ்க விக்ரமசிங்க அவருக்கு இடமளித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞன் தனது 19 வயது பிறந்தநாளில் தனுஷ்கவின் மனைவியிடம் சீஸ் கேக் செய்து தருமாறு கேட்டிருக்கிறான், அவரும் அதை செய்து கொடுத்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் குறித்த இளைஞன் தனுஷ்கவின் மனைவி 2 மாத குழந்தைக்கு தாய்பால் கொடுப்பதை கூட தவறான கண்ணோட்டத்தில் பார்த்துள்ளார், மேலும் இப்படியெல்லாம் நடத்துகொள்ள வேண்டாம் என இளைஞனை கண்டித்துள்ளனர்.

மேலும், தனுஷ்கவின் மனைவி குறித்த இளைஞன் பழக்க வழக்கங்கள் சரியில்லை, இவரை வீட்டை விட்டு அனுப்பிவிடுவோம் என தனுஷ்கவிடம் கூறியுள்ளார்.

பிறகு தனுஷ்காவும் இளைஞனிடம் இனி இங்கே இருக்க வேண்டாம் எனவும் இங்கியிருந்து சென்றுவிடு என கூறியுள்ளார்.

தனுஷ்க வீட்டை விட்டு போக சொன்ன காரணத்தில் கோபத்தில் இருந்த இளைஞன் இவர்களை கொலை செய்ய வேண்டுமே முடிவெடுத்து தனுஷ்கவிடம் மூன்று நாட்கள் கால அவகாசம் கொடுங்கள் நான் இங்கிருந்து சென்று விட்டுகிறேன் என கேட்டுள்ளார்.

பின்னர் கடைசி நாளான மூன்றாவது நாள் குறித்த இளைஞன் 6 பேரையும் கூரிய ஆயுத்தால் தாக்கி கொன்றுள்ளதாக முகநூலில் அந்த நபர் தெரிவித்துள்ளார்.