சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிகையை குறைக்க தீவிர முயற்ச்சியில் ஈடுபடும் பிரித்தானியா!

சட்டவிரோத புலம்பெயர்வோர் எண்ணிக்கை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பிரித்தானியா, தற்போது சட்டப்படி புலம்பெயர்வோர் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, புலம்பெயர்தலுக்கான புதிய கடப்பாடுகளை பிரித்தானிய அரசு விதித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்

அதேவேளை, புலம்பெயர்தல் அமைப்பை தவறாக பயன்படுத்தி பிரித்தானியாவுக்கு வர முயல்வோரைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிமுகமாகவுள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரும் உள்துறைச் செயலரும் கடந்த டிசம்பரில் அறிவிப்புகள் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்றைய தினத்திலிருந்து முதியவர்கள், நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் பணிகளுக்கு வரும் வெளிநாட்டவர்களின் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துவருவதற்கான தடை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

வருமான வரம்பு

அத்துடன், எதிர்வரும் மாதம் 4 ஆம் திகதி முதல் திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் வருபவர்களுக்கான குறைந்தபட்ச வருமான வரம்பு, 26,200 பவுண்டுகளில் இருந்து 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல், குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு 29,000 பவுண்டுகளாக உயர்த்தப்படவுள்ளதாகவும் அது தொடர்ந்தும் 38,700 பவுண்டுகள் வரை அதிகரிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.