பிரித்தானிய பொதுத் தேர்தல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

பிரித்தானிய பொது தேர்தல் வருகின்ற மே 2ம் திகதி நடைபெறாது என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் உள்ளாட்சி தேர்தல் மே 2ம் திகதியே நடத்தி முடிக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், அதற்கு ரிஷி சுனக் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதாவது, தேர்தல் திகதி தொடர்பாக சர்வதேச ஊடகமொன்று கேள்வியெழுப்பிய போது, “மே 2ம் திகதி பொதுத் தேர்தல் நடக்காது” என்று ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பொதுத் தேர்தல் 

2025ம் ஆண்டுக்குள் பிரித்தானியாவில் பொது தேர்தல் நடைபெற வேண்டும், என்ற நிலையில் இவ்வாறான ஊகங்கள் எழுந்தது.

அதற்கு ஏற்ப ரிஷி சுனக்கும் 2024ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தேர்தல் நடைபெறும் என்பது தன்னுடைய “ அனுமானம்” (working assumption) என இதற்கு முன்னர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது மே 2ம் திகதி தேர்தல் நடைபெறாது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.