கனடாவில் 34 மில்லியன் வரி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு தண்டனை விதிப்பு!

கனடாவில் 34 மில்லியன் வரி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவின் பிரம்டனைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு பாரியளவில் மோசடி செய்துள்ளார்.

அறக்கட்டளைக்கான நன்கொடை என்ற பெயரில் சுமார் 34 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்டுள்ளது. பெஸ்டுயுஸ் பெய்ன்டன் என்ற நபரே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த பாரிய வரி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2004ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 30 சேவை பெறுனர்களின் வரிக் கணக்கு விபரங்கள் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளன.