மட்டக்களப்பு வாவியில் இருந்து மீட்க்கப்பட்ட ஆணின் சடலம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டிக்களி வாவியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது இன்றைய தினம் (29.03.2024) மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பகுதியை சேர்ந்த 62 வயதையுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணை

சில்லறை கடை உரிமையாளரான இவர் நேற்று (28.03.2024) காலை 11.00 மணியளவில் வழமை போல் ஆரையம்பதி சந்தைக்கு பொருட் கொள்வனவிற்காக சென்றிருந்த நிலையில் மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியை அண்மித்த மட்டிக்களி ஆற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.