யாழில் உயிரிழந்த மனைவியின் ஆசையை கல்லறையில் நிறைவேற்றிய கணவன்

   யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இளம் மனைவிக்காக கணவன் அவரது கல்லறையில் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பலருக்கு ஆச்சரியர்த்தை ஏற்படுத்தி இருந்தாலும், அதன் காரணம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களின் முன்பு யாழில் இளம் குடும்ப பெண் திருமணமாக ஒரு வருடத்தில் புற்று நோயால் உயிரிழந்திருந்தார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் பளை பகுதியை சேர்ந்த பெண்ணெ உயிரிழந்திருந்தார்.

உயிரிழந்த மனைவியின் ஆசை

கடந்த வருடம் அப்பெண்னுக்கு திருமணமான நிலையில், கணவனும் , மனைவியும் டிக்டொக்கில் பிரபலமானவ்ர்கள் என கூறப்படுகின்றது. உயிரிழந்த பெண் , தமது டிக்டொக் பாலோவேர்ஸ் ஒரு மில்லியன் வந்தவுடன், கேக் வெட்டி கொண்டாட வேண்டுமென கணவரிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் காணொளி ஒரு மில்லியன் பாலோவேர்ஸ் வருவதற்கு முன்னரே யுவதி புற்றுநோயால் உயிரிழந்து விட்டார். எனினும் அவர் உயிரிழந்த சில நாட்களில் அவர்களின் டிக்டொக் பாலோவேர்ஸ் ஒரு மில்லியனை தொட்டுள்ளது.

இதனையடுத்து மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்த கணவர், யுவதியின் கல்லறையில் வைத்து கேக் வெட்டி அதனை கொண்டாடியதுடன், அக்காணொளியையும் வெளியிட்டுள்ளார்.