பேஸ்புக் மூலம் மாணவியை துஷ்பிரயோகம் செய்த 29 வயது இளைஞர் கைது!

பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை ( 01) பதிவாகியுள்ளது . சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பெண் பொலிஸ் விரித்த காதல் வலை
பண்டாரவளை கினிகம பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் முகநூல் ஊடாக நட்பை ஏற்படுத்தி அவரை கொழும்பில் உள்ள தங்குமிட விடுதி ஒன்றிற்கு அழைத்துச் சென்று சில நாட்களாக துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடமிருந்து பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது .

அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சந்தேக நபரின் தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்து , அந்த எண்ணுக்கு பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடாக அழப்பை ஏற்படுத்து காதல் ஆசை தூண்டுவது போல் நடித்து சந்தேக நபருடன் உறவை வளர்த்துள்ளனர் .

சுமார் இரண்டு வாரங்களாக , பெண் பொலிஸ் அதிகாரி தனக்கு வேலை ஒன்று தேடித்தருவதாக கோரியுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபர், வெலிமடை பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வருவதாகவும் , அப்போது பண்டாரவளையில் சந்தித்து , கொழும்புக்கு செல்வோம் எனவும் கூறியுள்ளார்.