உலகின் மிகப் பெரிய சூரிய கிரகணம் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை!

உலகின் சில பகுதிகளில் எதிர்வரும் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ள நிலையில், விமானப் பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க (America) அரசாங்கத்தின் ஃபெடரல் விமான சேவை நிர்வாகம் (FAA) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விமானப் பயண எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

முழு சூரிய கிரகணம் 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அமெரிக்கா, மெக்சிகோ (Mexico), கனடா (Canada) மற்றும் வட அமெரிக்காவின் (North America) பிற பகுதிகள் உட்பட பல்வேறு நாடுகளில் எதிர்வரும் 8 ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளது.

இந்த முழு சூரிய கிரகண நிகழ்வு இந்திய நேரப்படி ஏப்ரல் 8 ஆம் திகதி மதியம் 2.12 மணி முதல் ஏப்ரல் 9 ஆம் திகதி அதிகாலை 2.22 மணி வரை நீடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முழு சூரிய கிரகணத்தை கண்டு களிப்பதற்காக பலர் விமான பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

பயணிகளின் பாதுகாப்பு

அதிகளவான முன்பதிவுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதிகமான விமானங்கள் குறித்த தினத்தில் அதன் பயணங்களை மேற்கொள்ளும் போது சில தாமதங்கள் ஏற்படக்கூடும்.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து சிறந்த பாதுகாப்பை வழங்க ஃபெடரல் விமான சேவை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.   

அத்துடன், வான்வழிப் பயணத்தில் ஏற்படவுள்ள நெரிசல்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு விமானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது“ என குறிப்பிடப்பட்டுள்ளது.