பூமாலையை விமானத்தில் கொண்டு வந்த நபருக்கு நிகழ்ந்த சோகம்!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்ற நபரொருவர் தான்னுடைய திருமணத்திற்கு இந்தியாவில் ஒரு வடிவான பூமாலையை செய்ய சொல்லி அதனை விமானத்தில் கொண்டுவந்துள்ளார்.

குறித்த மாலை யாழ்.சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து குறித்த நபரிடம் தேவையற்ற விசாரணைகளை நடாத்தியுள்ளனர்.

“இப்பிடி மாலையெல்லாம் கொண்டு வாறதுக்கு அனுமதி இல்லை. அப்பிடிக்கொண்டுவர வேண்டுமென்றால் மாலையை மூன்று நாட்கள் தனிமைப்படுத்தலில் வைத்து பூமாலையில் கிருமி ஒண்டும் தொத்தாது எண்டு உறுதிப்படுத்திய பிறகு தான் கொண்டுவர முடியும் என சங்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

மாலையைக் கொண்டு வந்தவரும் நீண்ட நேரமாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் வாதாடிப் பார்த்துள்ளார் இருப்பினும் அவர்கள் ஏற்றுகொள்ளவில்லை.

இதேவேளை மாலைக்கான வாதடிய நபர் கோபமடைந்து குறித்த மாலையை அங்கேயே போட்டுவிட்டு வந்துள்ளார்.

இதேவேளை, போதைப்பொருளுடன் வருபவர்களை எல்லாம் பிடிக்க முடியவில்லை. தங்களின் வீரத்தை உளுந்திலையும், மாலையிலையும் தான் காட்டிகிறார்கள். இப்பிடியான சுங்கத்துறை அதிகாரிகளை வைத்திருந்தால் நாடு எப்படி முன்னெரும் என பாதிக்கப்பட்டவர் சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை வெளியிட்டுள்ளார்.