யாழ் விபத்தில் விடுதலைப் புலிகள் முன்னாள் போராளி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வந்த தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

யாழ். வடமராட்சி கிழக்கு வேம்படி உடுத்துறையை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் தலையின் பின்பகுதியில் காயமடைந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிசைக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கடற்புலிகளின் அரசியல் பிரிவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கடமையாற்றி 2009 ஆண்டு முள்ளிவாக்கால் இறுதி யுத்தத்தின் முடிவில் பிரான்ஸில் அகதி அந்தஸ்ட் கோரிய நிலையில் அவை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு பாதுகாப்பு கெடுபிடிக்குள் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.