வவுனியாவில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்!

வவுனியாவில் (Vavuniya) ஹெரோயின் மற்றும் 70 போதை மாத்திரைகளுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தவகவலையடுத்து இன்று (28.04.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் மீட்பு

இதன்போது வவுனியா, ஓமந்தைப் பகுதியில் இளைஞர் ஒருவரின் உடமையில் 6 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் இருந்து 70 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாபாவும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த இளைஞர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.