மன்னார் தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை!

மன்னார் (Mannar) மாவட்டத்தின் தேசிய பாடசாலைகளில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவதால் உயர்தர மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிப்படைந்துள்ளதாக மன்/புனித சவேரியார் ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரி அதிபர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் (06.05.2024) பாடசாலையின் அதிபர்கள், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

குறித்த மனுவில், “நீண்டகாலமாக நிலவும் ஆசிரியர் வெற்றிடம் காரணமாக உயர்கல்வி பிரிவுகளை நடத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

தொடர்ச்சியான பிரச்சினைகள் 

மேலும், சில கற்கைகளுக்கு முழுமையான ஆசிரியரின்மை காரணமாக பாடநெறியை நிறுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. 

அதேவேளை, வடமாகாணத்திலுள்ள பல பாடசாலைகளில் இவ்வாறான ஆசிரியர் பற்றாக்குறை, தளபாட பிரச்சினை மற்றும் கட்டிட தேவைகள் போன்றன தொடர்ச்சியாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.