பஸ்ஸில் பயணித்த முதியவர் திடீர் மரணம்!

கொழும்பிலிருந்து மாத்தளை நோக்கிப் பயணித்த பஸ்ஸில் முதியவர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை டிப்போவிற்கு சொந்தமான பேருந்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்ருள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (07) நிட்டம்புவ பிரதேசத்தை அண்மித்த போது , பின் இருக்கையில் அமர்ந்திருந்த முதியவர் சுகயீனமுற்றிருப்பதை அறிந்து பஸ் நிறுத்தப்பட்டுள்ளது

பொலிஸார் விசாரணை
பின்னர் , கயீனமுற்ற நபரை நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்திய அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட முதியவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலத்தை வட்டுப்பிட்டியால ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர் .

அதேவேளை உயிரிழந்த முதியவரின் விவரங்கள் தெரியவராத நிலையில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.