யாழில் வைத்தியர் மாப்பிள்ளைகளுக்கே இந்த நிலையா? பேசு பொருளாக மாறிய சுவரொட்டி !

யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இரு மாவட்டங்களிலும் கிளைகள் உள்ளதாக நோட்டீஸ் அடித்து கலியாணப் புறோக்கர் வேலை பார்க்கும் ஒரு நிறுவனம் யாழ் மாநகரசபைக்கு முன் உள்ள ஆலமரத்திற்கு அருகில் பாரிய விளம்பரங்களை ஒட்டியுள்ளது.

குறித்த விளம்பரங்கள் மாநகரசபை மட்டுமல்லாது பல்வேறு இடங்களிலும் ஒட்டியிருந்தாலும் மாநகரசபைக்கு முன்பே அலங்காரமாக ஒட்டியுள்ள

அந்த விளம்பர பிரசுரங்களில் வைத்தியர் ஒருவருக்கு படித்த பெண் தேவை என்பதையே முதன்மைப்படுத்தி விளம்பரப்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாண வைத்தியர்களுக்கு பெண் கிடைப்பது அவ்வளவு கஸ்டமாகப் போய்விட்டதா? என பலரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்கள்.

யாழ்ப்பாண மாநகர சபையில் படித்த அழகான பெண்கள் இருக்கின்றார்கள் என கருதி குறித்த கலியாணப் புறோக்கர் நிறுவனம் அந்த நோட்டீசை ஒட்டியுள்ளார்களா? என மாநகரசபையில் பணியாற்றும் திருமணமாகாத ஆண் ஊழியர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

யாழ்ப்பாண கல்யாணச் சந்தையில் மிகவும் மதிப்புக்குரிய மாப்பிளை அந்தஸ்தில் இருப்பவர்கள் வைத்தியர் மாப்பிள்ளைகள்தான்.

அதற்குப் பின்னரே ஏனைய மாப்பிள்ளைகள் பார்க்கப்படுகின்றார்கள்.

இவ்வாறான நிலையில் வைத்தியர் மாப்பிள்ளைகளுக்கே இந்த நிலை என்றால் எங்களைப் போன்ற சாதாரன உத்தியோகத்தர்களுக்கு எப்போது பெண் கிடைக்கும் என்று யாழ் மாநகரசபையில் உள்ள திருமணமாகாத கன்னி ஆண்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.