ஜேஜே பட நடிகையா இது!

ஜேஜே திரைப்பட நடிகை பிரியங்கா கோதாரியின் தற்போதைய புகைப்பம் சமூக வளைத்தளங்களில் வெளியாகி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

நடிகை பிரியங்கா கோதாரி
மாதவன் நடிப்பில் சரண் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெ.ஜெ. இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா கோதாரி.

இவர் இதற்கு பின் பெரிதும் எந்த ஒரு படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை. என்றாலும் ஒரே படத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

தமிழ் சினிமாவில் அவர் நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் எதிர்பார்பில் இருந்தனர். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான கச்சேரி படத்தில் ‘ வாடா வாடா பையா ‘ பாடலுக்கு நடமாடியிருந்தார்.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து இவரின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருதுடன் ஜேஜே பட நடிகையா இது ? அப்படி மாறிட்டாங்களே என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.