யாழில் கடும் வெயிலால் மேலும் ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நேற்று (10) அல்வாய் கிழக்கை சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.

முதியவர் வீட்டில் மயக்கமுற்றதை அடுத்து , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனை சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட நிலையில் , கடும் வெப்ப தாக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையிட்டார்.

நேற்று முன் தினம் (9) கடும் வெப்ப தாக்கத்தால் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 44 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்திருந்தார்.

அதேவேளை, அண்மைய நாட்களில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐவர் “ஹீட் ஸ்ரோக்” ஏற்பட்டு உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.